TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் உமிழ்வு நிலை

December 5 , 2023 227 days 182 0
  • பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கைக்கான மூன்றாவது தேசிய அறிக்கை’ என்ற அரசாங்க அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வில் பொருளாதார வளர்ச்சி கொண்டுள்ள தொடர்பினை குறைப்பதில் நாட்டின் நடவடிக்கையில் உள்ள கணிசமான முன்னேற்றத்தை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • இந்திய நாடானது, 2005 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான உமிழ்வுச் செறிவில் 33% குறைத்துள்ள நிலையில் இது 11 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலக்குகளை தாண்டியது என்பதைக் குறிக்கிறது.
  • வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% ஆக இருந்த போதிலும், உமிழ்வுகள் ஆண்டிற்கு 4% மட்டுமே உயர்ந்துள்ளது.
  • உலக மக்கள்தொகையில் 17% பங்கினைக் கொண்டுள்ள இந்தியா, உலகளாவிய கார்பன் உமிழ்வு 4 சதவீதத்திற்கும் குறைவான பங்கையே கொண்டுள்ளது.
  • அதே காலகட்டத்தில் 1.97 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் பிடிப்பு பகுதிகளை இந்தியா உருவாக்கியுள்ளது.
  • 2005 ஆம் ஆண்டின் அளவுடன் ஒப்பிட்டு, 2030 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான உமிழ்வு தீவிரத்தை 45% குறைக்கும் இலக்கை அடைவதற்கான ஒரு பாதையில் இந்தியா உள்ளது.
  • எரிசக்தித் துறையானது மானுடவியல் சார்ந்த உமிழ்வுகளுக்கு அதிகப் பங்கினை கொண்டுள்ள (75.81%) நிலையில், அதைத் தொடர்ந்து வேளாண்மை (13.44%), தொழில் துறைச் செயல்முறைகள் மற்றும் தயாரிப்புப் பொருட்கள் பயன்பாடு (8.41%), மற்றும் கழிவுகள் (2.34%) ஆகியவை அதிகப் பங்கினைக் கொண்டுள்ளன.
  • நிலப் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் (LULUCF) துறையானது குறிப்பிடத் தக்க வகையில் 4,85,472 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான (GgCO2e) உமிழ்வை நீக்கியுள்ளது.
  • 2028 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர  பருவநிலைப் பேச்சு வார்த்தையை இந்தியா நடத்த உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு பசுமை இல்ல வாயு இருப்புக்களுடன் தனது மூன்றாவது தேசிய அறிக்கையினைச் சமர்ப்பித்ததன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தனித்து நிற்கிறது.
  • சீனா (2014), பிரேசில் (2016), தென்னாப்பிரிக்கா (2017) மற்றும் சவுதி அரேபியா (2012) போன்ற பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் சமீபத்திய தரவைக் குறிக்கிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் சார்ந்த எரிசக்தி ஆதாரங்களில் இருந்து 50% வரை நிறுவப்பட்ட ஒட்டுமொத்த மின்சக்தி திறனை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழிய உமிழ்வு கொண்ட பொருளாதாரமாக மாற இந்தியா வெகுவாக உறுதி பூண்டுள்ளதோடு, இது நீண்ட கால நிலைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்