TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் உறுப்பு தானம்

August 11 , 2024 107 days 130 0
  • கடந்த ஆண்டு 5,651 ஆண்களுடன் ஒப்பிடுகையில் உயிரோடு இருக்கும்போதே உறுப்பு தானம் செய்த பெண்களின் எண்ணிக்கை 9,784 ஆக இருந்தது.
  • மேலும் ஒரேயொரு திருநரும் மற்றொரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற உறுப்பு தானம் செய்தார்.
  • 2023 ஆம் ஆண்டில் உயிரோடு இருக்கும் போதே உறுப்பு தானம் செய்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 15,436 ஆகும்.
  • உயிரோடு இருக்கும்போதே உறுப்பு தானம் செய்த மற்றும் இறந்த பின்பு உறுப்பு தானம் செய்த நபர்கள் ஆகிய இருவரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மொத்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 18,378 ஆகும் என்ற நிலையில்  இது இதுவரை இல்லாத ஒரு அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
  • 844 ஆண்கள் தங்கள் உறுப்புகளை தானம் செய்துள்ளதையடுத்து, இறந்த பின்பு உறுப்பு தானம் செய்த நபர்களின் எண்ணிக்கை ஆண்கள் மத்தியில் மிக அதிகமாக இருந்த அதே நேரத்தில் பெண்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை 255 ஆக பதிவாகி உள்ளது.
  • ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளின் (உயிரோடு இருக்கும் போதே உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் இறந்த பின்பு தானம் செய்தவர்கள்) எண்ணிக்கை 13,426 ஆகும்.
  • அதைத் தொடர்ந்து கல்லீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை முறையே 4,491 மற்றும் 221 ஆக பதிவாகியுள்ளது.
  • உடல் உறுப்பு தானத்தில் 252 பேர் சடல உறுப்பு தானம் செய்ததுடன் தெலுங்கானா முதலிடத்தில் உள்ள நிலையில் அதனை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 178 பேர் சடல உறுப்பு தானம் செய்துள்ளனர்.
  • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கையில், டெல்லி 2,576 பதிவுகளுடன் முன்னிலையில் உள்ளது என்பதோடு தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை முறையே 1,633 மற்றும் 1,305 பதிவுகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • கடந்த ஆண்டு 70 இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்