TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு

July 13 , 2022 741 days 4864 0
  • 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளிலும் இந்த ஆண்டு 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ள நிலையில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும்.
  • உலக மக்கள் தொகையானது, இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் 8 பில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனாகவும், 2100 ஆம் ஆண்டில் 10.4 பில்லியனாகவும் உயரலாம்.
  • உலக மக்கள் தொகையானது 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகவும் குறைவான வேகத்தில் அதிகரித்து வந்தது.
  • இது 2020 ஆம் ஆண்டில் 1 சதவீதத்திற்கும் கீழே சரிந்தது.
  • 2021 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையின் சராசரி கருவுறுதல் வீதமானது ஒரு பெண்ணுக்கு அவரது வாழ்நாள் முழுவதும் 2.3 குழந்தைப் பிறப்புகளாக இருந்தது.
  • இது 1950 ஆம் ஆண்டில் சுமார் 5 என்ற குழந்தைப் பிறப்புகளில் இருந்து வீழ்ச்சி அடைந்தது.
  • உலகளாவிய கருவுறுதல் வீதமானது 2050 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தை பிறப்புகளாக மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்