ஹென்லி மற்றும் பார்ட்னர்ஸ் என்ற ஆலோசனை வழங்கீட்டு நிறுவனமானது, உலகில் ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கையை வைத்து பல நகரங்களை தரவரிசைப் படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரம், டோக்கியோ, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, லண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முதல் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் சீனா மற்றும் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அதிக இடங்களைப் பெற்றுள்ளன.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பெங்களூரு நகரம் தனித்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளது.