TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் உலகின் முன்னணி அபினி உற்பத்தி

December 16 , 2023 345 days 243 0
  • 2023 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை முந்தி, மியான்மர் உலகின் முன்னணி அபின் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் தலிபான்கள் அறிவித்த போதைப் பொருள் தடைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அபினி (ஓபியம்) சாகுபடியில் ஏற்பட்ட 95 சதவிகித சரிவானது மியான்மர் நாட்டிற்கு உலகளவில் விநியோகம் செய்வதற்கானப் பெரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
  • அபினி செடி (ஓபியம் பாப்பி) சாகுபடியானது, தற்போது சுமார் 75% வரை அதிக லாபம் ஈட்டுகிறது.
  • அபினி செடிகளின் சராசரி விலையானது, ஒரு கிலோவிற்கு தோராயமாக 355 டாலர் ஆக உயர்ந்துள்ளது.
  • இதன் சாகுபடி பரப்பு ஆனது, ஆண்டிற்கு ஆண்டு 18% அதிகரித்து, 47,000 ஹெக்டேரை எட்டியுள்ளது.
  • இது 2001 ஆம் ஆண்டிலிருந்து பதிவான அதிக அளவில் சாத்தியமான விளைச்சலைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்