TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் காவிரி நதி நீர் பங்கீடு

October 9 , 2023 285 days 230 0
  • 11 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை காலத்தின் போதான தமிழக மாநிலத்திற்கான காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்கான அளவு 50 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பருவத்தின் போது 50 ஆயிரம் மில்லியன் கன அடிக்குக் குறைவாக நீர் வழங்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும்.
  • இந்த ஆண்டிற்கான நதி நீர்ப் பங்கீடு ஆனது (45.16 ஆயிரம் மில்லியன் கன அடி) 2016-17 ஆம் ஆண்டிற்கான நீர் பங்கீட்டினை விட குறைவாக உள்ளது.
  • ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்திற்கு சுமார் 53 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான நீர் பங்கீட்டு காலக் கட்டத்தின் முதல் நான்கு மாதங்களில், தமிழகத்திற்கு சுமார் 40.15 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்