11 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டின் தென்மேற்குப் பருவமழை காலத்தின் போதான தமிழக மாநிலத்திற்கான காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்கான அளவு 50 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பருவத்தின் போது 50 ஆயிரம் மில்லியன் கன அடிக்குக் குறைவாக நீர் வழங்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும்.
இந்த ஆண்டிற்கான நதி நீர்ப் பங்கீடு ஆனது (45.16 ஆயிரம் மில்லியன் கன அடி) 2016-17 ஆம் ஆண்டிற்கான நீர் பங்கீட்டினை விட குறைவாக உள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்திற்கு சுமார் 53 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான நீர் பங்கீட்டு காலக் கட்டத்தின் முதல் நான்கு மாதங்களில், தமிழகத்திற்கு சுமார் 40.15 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட்டது.