கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் சம்பா பருவத்தில் காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சம்பா சாகுபடியின் பரப்பளவு சுமார் 1.5 லட்சம் ஏக்கர் குறைந்து உள்ளது.
செப்டம்பர் 25 ஆம் தேதி நிலவரப்படி, மொத்த சம்பா சாகுபடி பரப்பளவு சுமார் 1.77 லட்சம் ஏக்கர் ஆகும்.
இது கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் (செப்டம்பர் 26, 2022) 3.31 லட்சம் ஏக்கராக இருந்தது.