2023 ஆம் ஆண்டில் இந்திய நாடானது சூரிய சக்தி உற்பத்தியில் ஜப்பானை விஞ்சி மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி நாடாக மாறியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சூரிய சக்தி உற்பத்தியானது 2015 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட ஆறு மடங்கு அதிகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் உலக மின்சார உற்பத்தியில் சூரிய சக்தி உற்பத்தியின் பங்கானது 5.5 சதவீதமாகும்.
சூரியசக்தி மின் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
சீனா (+156 TWh), அமெரிக்கா (+33 TWh) மற்றும் பிரேசில் (+22 TWh) ஆகிய நாடுகளுக்குப் அடுத்தபடியாக 2023 ஆம் ஆண்டில் (+18 TWh) இந்தியாவில் உலகின் நான்காவது அதிக சூரிய மின் உற்பத்தி பதிவாகியுள்ளது.