2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டில் சென்னையில் அதிக அளவு மழை பெய்து உள்ளது.
2023 டிசம்பர் 2 மற்றும் 4 ஆகிய தேதிகளுக்கு இடையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் மழைக் கண்காணிப்பு மையங்களில் 53 செமீ மற்றும் 52 செமீ மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் 3 முதல் 5 வரை சென்னையில் மொத்தம் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
டிசம்பர் 1, 2015 அன்று, 24 மணி நேரத்தில் 494 மிமீ மழை பெய்ததால், நகரம் பெரும் வெள்ளத்தில் மூழ்கியது.
டிசம்பர் 2, 2015 அன்று சென்னை நகரம் பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நகரம் ஒட்டு மொத்தமாக 1049.3 மிமீ மழையைப் பெற்ற நிலையில், இது 1918 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெறப்பட்ட அதிகபட்ச மழை ஆகும்.