2017 ஆம் ஆண்டில் 7.742 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் 10.317 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளதுடன் மாநிலத்தின் பால் உற்பத்தி என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தின் பால் உற்பத்தியானது 2017 முதல் 2020 ஆம் ஆண்டு வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்னாக இருந்தது.
தற்போது 2021-2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
இங்கு 2019-2020 ஆம் ஆண்டில் பால் கிடைக்கப் பெறுவதற்கான தனிநபர் வீதம் ஒரு நாளைக்கு 316 கிராமாக இருந்தது.
2022-23 ஆம் ஆண்டில் இது 369 கிராமாக அதிகரித்துள்ளது.