2023 ஆம் ஆண்டில், பணி புரியும் பெண்களுக்கான உள்ளடக்கம் மற்றும் சாதக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த இந்திய நகரமாக சென்னை மாறியுள்ளது.
இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்ட இரண்டு பிரிவுகளிலும், தமிழ்நாடு நகரங்கள் முதல் இடத்தைப் பெற்றுள்ளதோடு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் 49 நகரங்கள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பிரிவில் 64 நகரங்களும் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன.
மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் சென்னை முதலிடத்திலும், ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் திருச்சிராப்பள்ளி முதலிடத்திலும் உள்ளது.
கோயம்புத்தூர் (மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்), திருச்சிராப்பள்ளி, வேலூர், சேலம், ஈரோடு, மற்றும் திருப்பூர் (ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்) என மொத்தம் ஏழு நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாநகரம், தனது சமூக உள்ளடக்க மதிப்பெண் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
அதன் தொழில்துறை உள்ளடக்க மதிப்பெண் விகிதம் ஆனது 1 இடம் சரிந்து இந்த அளவில் பெங்களூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.