மத்திய அரசானது, 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டத்தின் 479வது பிரிவின் விதிகளை அமல்படுத்த செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு (UT) அறிக்கை அனுப்பியுள்ளது.
ஒரு குற்றத்தினைப் பற்றிய புலன் விசாரணை அல்லது விசாரணையின் போது, அந்தக் குற்றத்திற்காக வழங்கப்படும் அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தில் பாதி காலம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத்தினால் பிணை ஆணையில் விடுவிக்கப்படலாம் என்று BNSS சட்டத்தின் 479 (1)வது பிரிவு கூறுகிறது.
ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ், அது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை போன்ற தண்டனைகளில் ஒன்று வழங்கப்படும் குற்றமாக இருக்கக் கூடாது.
மேலும், BNSS சட்டத்தின் 479 (3)வது பிரிவானது, இத்தகைய விசாரணைக் கைதிகளை ஜாமீன் அல்லது பிணையில் விடுவிப்பதற்காக வேண்டி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கு வேண்டிய மிக முக்கியப் பொறுப்பினைச் சிறைச்சாலைக் கண்காணிப்பாளருக்கு வழங்குகிறது.