TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழைப்பொழிவு

September 4 , 2023 452 days 323 0
  • இந்த நூற்றாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகும் மழைப் பொழிவை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழைப் பொழிவு மிகக் குறைவாகும்.
  • இந்தியாவில் வழக்கமாக இந்த மாதத்தில் பெய்யும் மழைப் பொழிவினை விட இந்த ஆண்டில் 36% குறைவான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
  • நான்கு பருவமழை மாதங்களில், ஜூலை மாதத்தில் பதிவாகும் 28 செ.மீ. மழைப் பொழிவிற்கு அடுத்தப் படியாக பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவு (25.4 செ.மீ) மழைப் பொழிவுப் பதிவாகும்.
  • இந்தியாவில் கடைசியாக ஆகஸ்ட் மாதத்தில் இத்தகையக் கடுமையான மழைப் பற்றாக்குறை 2005 ஆம் ஆண்டில் பதிவான நிலையில், அந்த ஆண்டில் பதிவான மழைப் பற்றாக்குறையானது இயல்பான மழைப்பொழிவில் சுமார் 25 சதவீதமாகவே இருந்தது.
  • 2009 ஆம் ஆண்டில், இந்தியாவானது கடந்த அரை நூற்றாண்டில் காணாத மிகப்பெரிய வறட்சியை எதிர்கொண்ட நிலையில், அப்போதைய மழைப் பொழிவானது ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழைப் பொழிவினை விட 24% குறைவாக இருந்தது.
  • ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழைப் பொழிவானது, ஒட்டு மொத்த தேசிய மழைப் பற்றாக்குறை அளவினை 10% ஆக மாற்றியது.
  • பிராந்திய அளவிலான மழைப் பற்றாக்குறையானது கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் 17% ஆகவும், மத்திய இந்தியாவில் 10% ஆகவும் மற்றும் தென் இந்தியாவில் 17% ஆகவும் உள்ளன.
  • எல் நினோ நிலை வலுவாதல் மற்றும் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள சாதகமற்ற சூழ்நிலைகள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மாத மழைப் பொழிவினை ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்