TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு செலவின மதிப்பாய்வு: ஓராண்டில் ஏற்பட்ட பருவநிலை தாக்க சேதங்கள் குறித்த அறிக்கை

January 9 , 2024 320 days 249 0
  • 2023 ஆம் ஆண்டில் அதிக சேதத்தினை ஏற்படுத்திய பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உலகின் முதல் 20 பேரழிவுகளில் 85 சதவிகிதம் (17)  ஆனது வெள்ளம் மற்றும் புயல்களால் ஏற்பட்டவை ஆகும்.
  • இந்த அறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 20 பேரழிவுகள் ஆறு கண்டங்களில் (அண்டார்டிகாவைத் தவிர்த்து) உள்ள 14 நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
  • ஆய்வாளர்கள் பேரழிவுகளின் பொருளாதாரச் செலவினங்களைக் கணக்கிட்டனர்.
  • காட்டுத்தீ, வறட்சி (பருவநிலை சார்ந்த பேரழிவுகள்) முதல் வெள்ளம் மற்றும் புயல்கள் (நீரியல் மற்றும் வானிலை சார்ந்த பேரழிவுகள்) வரையிலான பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • அமெரிக்காவில் 74 சதவீத பொருளாதார இழப்புகள் (76.4 பில்லியன் டாலர் மதிப்பு) காப்பீடு செய்யப்பட்டிருந்தன.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்துடன் ஒப்பிடுகையில், இந்தப் பிராந்தியத்தில் வெறும் 13 சதவீத பொருளாதார இழப்புகள் (22.2 பில்லியன் டாலர்) மட்டுமே காப்பீடு செய்யப் பட்டிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்