TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான நிதி உறுதித் தன்மை அறிக்கை

July 5 , 2023 508 days 318 0
  • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுமார் 3.6 சதவீதமாகக் குறையும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • ஆனால் சில்லறைக் கடன் வாங்குபவர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் மாதாந்திரக் கொடுப்பனவுகளை அந்த தேதிக்குள் செலுத்துவதில்லை.
  • 2022-23 ஆம் ஆண்டில் தனியார் துறை வங்கிகள் அதிக அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்ததால், மொத்த வாராக் கடன் விகிதத்தில் தள்ளுபடி செய்யப்பட்டக் கடன்கள் அதிகரித்தன.
  • இது 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து குறைந்து வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்