TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 7 அம்சங்களுக்கு முன்னுரிமை

February 3 , 2023 815 days 441 0
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஏழு முக்கிய முன்னுரிமை அம்சங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
  • அவை ஒன்றையொன்றின் தேவையைப் பூர்த்தி செய்து அமிரித் கால் என்ற கால கட்டத்தில் அரசாங்கத்தினை வழி நடத்துகின்ற சப்தரிஷிகளாகச் செயல்பட உள்ளன.
  • இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாட உள்ள 2047 ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டு காலத்தைக் குறிக்கும் வகையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சொல் அம்ரித் கால் என்பதாகும்.
  • இது அடுத்த 25 ஆண்டுகளுக்கான அரசின் ஒரு செயல்திட்டமாகும்.
  • அந்த ஏழு முன்னுரிமை அம்சங்கள்
    • உள்ளார்ந்த மேம்பாடு
    • கடைக்கோடி மக்களையும் பலன் சென்றடைதல்
    • உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு
    • திறன்களை வெளிக் கொணருதல்
    • பசுமை மேம்பாடு
    • இளயோர் திறன்
    • நிதித்துறை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்