இந்தோனேசியாவின் உள்ள மேற்கு சுமத்ராவில் மெராபி மலை அமைந்துள்ளது.
இது சுமத்ராவில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் எரிமலை என்ற பெயரினைக் கொண்டுள்ளது.
பசிபிக் எரிமலை வளையம் என்றும் அழைக்கப்படுகிற பசிபிக் கடலைச் சுற்றியுள்ள வளையமானது பசிபிக் பெருங்கடலில் செயல்பாட்டில் உள்ள எரிமலைகள் மற்றும் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு பாதையாகும்.
இது பசிபிக், ஜுவான் டி ஃபூகா, கோகோஸ், இந்திய-ஆஸ்திரேலியன், நாஸ்கா, வட அமெரிக்க மற்றும் பிலிப்பைன் தட்டுகள் உட்பட பல கண்டத் தட்டுகளுக்கு இடையே உள்ள எல்லைகளைப் பகிர்ந்துள்ளது.