2023 ஆம் ஆண்டு வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை கணக்கெடுப்பு - முக்கியத் தகவல்கள்
January 20 , 2024 314 days 229 0
இந்த ஆண்டு கணக்கெடுப்பு ஆனது, கிராமப்புற இந்தியாவில் உள்ள 14 முதல் 18 வயதுடைய சிறார்கள் மீது கவனம் செலுத்துவதோடு இந்த வயதினர் குழு குறித்து கடைசியாக 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆய்வு ஒன்றும் செய்யப்பட்டது.
சுமார் 30% பேர் அவ்வப்போது தங்கள் பெற்றோருக்காக வேலை செய்கிறார்கள்.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளில் ஒருவரால் இன்னும் இரண்டாம் வகுப்பு நிலையிலான உரையை தங்களது பிராந்திய மொழியில் சரளமாக படிக்க முடியாத நிலை உள்ளது.
இந்த வகையில் கல்விச் சேர்க்கை பிரிவுகள் அனைத்திலும் சிறுவர்களை விட சிறுமிகள் சிறப்பான செயல் திறனைக் கொண்டுள்ளனர்.
சிறுவர்களை விட, அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் 12 ஆம் வகுப்புக்குப் பிறகும் தொடர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.
பாதிக்கும் மேற்பட்டவர்கள், 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பில் பொதுவாக எதிர் பார்க்கப்படும் திறன் ஆன வகுத்தல் திறனறிவு இன்றி (3 இலக்க எண்ணை ஒரு இலக்க எண்ணால் வகுத்தல்) உள்ளனர்.
சுமார் 57% பேர் ஆங்கில மொழி வாக்கியங்களைப் படிக்கக் கூடியவர்களாகவும்; அவர்களில் 73 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவற்றின் பொருளை சொல்லக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
எண்கணிதம் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு ஆகிய இரண்டிலும் சிறுமிகளை விட சிறுவர்கள் சிறப்பான செயல்திறன் கொண்டுள்ளனர்.
கணக்கெடுக்கப்பட்ட 90% வீடுகளில் திறன் பேசிகள் இருந்தன.
கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில், சுமார் 95% சிறுவர்கள் மற்றும் 90% பெண்கள் திறன் பேசிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளனர்.
'அடிப்படை' ASER கணக்கெடுப்பு ஆனது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டதோடு மேலும் 2014 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நடத்தப் பட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் இது 2016 ஆம் ஆண்டில் மாற்று (மாறுநிலை) ஆண்டு சுழற்சி முறைக்கு மாற்றப் பட்டது.