15வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்த இருக்கின்றது.
2023 ஆம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை யானது ஒடிசாவின் புவனேஸ்வரில் விளையாடிய 2018 பதிப்பின் அதே முறையைப் பின்பற்றும்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பானது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற இருக்கும் மகளிர் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் இணை நாடுகளாக ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தை அறிவித்தது.
1971 ஆம் ஆண்டு உலகக் கோப்பை துவங்கியதில் இருந்து இந்தியா இதனை நடத்துவது இது நான்காவது முறையாகும்.
இந்தியாவில் நடைபெற்ற முந்தையப் பதிப்புகளான 1982 (மும்பை), 2010 (புது தில்லி) மற்றும் 2018 (புவனேஸ்வர்) ஆகியவைகளில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது.
இருப்பினும், இந்தியா 1975 ஆம் ஆண்டு முதல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் வெல்லவில்லை.