2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில வாரியத்தின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
May 10 , 2023 567 days 395 0
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 8,03,385 மாணவர்களில் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியின் மகள் எஸ்.நந்தினி 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின் +2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்து உள்ளார்.
2023 ஆம் ஆண்டில் மொத்தத் தேர்ச்சி சதவீதம்: 94.03 சதவீதம் ஆகும்.
மாணவிகளின் தேர்ச்சி சதவீதம்: 96.38 சதவீதம் ஆகும்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்: 91.45 சதவீதம் ஆகும்.
97.85 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்துள்ளது.
இதில் விருதுநகர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டம் (97.79%) மற்றும் பெரம்பலூர் மாவட்டம் (97.59%) இடம் பெற்று உள்ளது.
தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2023 அறிக்கைகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 326 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரியில் தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியம் நடத்தும் பள்ளிகள் 93.45 சதவீதம் தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
2022 ஆம் ஆண்டில் 93.80% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.