TNPSC Thervupettagam

2023 ஆம் நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை இலக்கு

June 6 , 2023 409 days 245 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீத நிதிப் பற்றாக் குறை என்ற இலக்கை மத்திய அரசு எட்டியுள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 17.33 லட்சம் கோடி ரூபாய் அல்லது 6.4 சதவீதமாக உள்ளது.
  • ஆனால் 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்ட ஒரு திருத்தப்பட்ட மதிப்பீடான 17.55 டிரில்லியன் ரூபாயை விட இந்தப் பற்றாக்குறை குறைவாக இருந்தது.
  • 2023 ஆம் நிதியாண்டிற்கான மொத்த வருவாய் வரவுகள் ரூ.24.56 லட்சம் கோடியாகவும், மொத்தச் செலவினம் ரூ.41.89 லட்சம் கோடியாகவும் இருந்தது.
  • 23.84 டிரில்லியன் ரூபாய் வருவாய் வரவுகளில், 20.97 டிரில்லியன் ரூபாய் வரி வருவாய் ஆகும்.
  • வரி அல்லாத வருவாய் சுமார் 2.86 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 116.4% என்ற அளவை விட குறைவாக இருந்தது.
  • நிகர வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் ஆகியவற்றில் முறையே 13.9% மற்றும் 8.2% சரிவானது பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்