TNPSC Thervupettagam

2023 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை

May 19 , 2023 558 days 341 0
  • 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையானது 72,418.99 கோடி ரூபாயாக இருந்தது.
  • நிதிப் பற்றாக்குறை என்பது மொத்த வருவாய்க்கும் மொத்தச் செலவினத்திற்கும் உள்ள வித்தியாசமாகும்.
  • மாநில அரசானது 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் போது, அதன் நிதிப் பற்றாக்குறை மதிப்பீட்டினை 2022-23 ஆம் ஆண்டிற்கான 74,524.64 கோடியாகத் திருத்தியமைத்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில் 27,549.09 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறையானது, வரவுகளை விட செலவினம் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த வரவினங்கள் (வருவாய் ரசீதுகள் மற்றும் மூலதன ரசீதுகள் உட்பட) 2,43,133.76 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மொத்தச் செலவினங்கள் (வருவாய் மற்றும் மூலதனச் செலவு, நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள் உட்பட) 3,15,552.75 கோடி ரூபாய் ஆகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் 2,42,013.85 கோடி ரூபாயாக இருந்தது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR), மத்திய வரிகளில் பங்கு, வரி அல்லாத வருவாய், உதவி  மானியங்கள் மற்றும்  பங்களிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,4,1196.22 கோடி ரூபாயாக இருந்தது.
  • மாநிலத்தின் மொத்த வருவாயில் 70 சதவிதத்துக்கு அதிகமாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உள்ளது.
  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி (GST), முத்திரைத் தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானம் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் (VAT),  மதுபானம் மற்றும் நில வருவாய் மீதான கலால் வரி ஆகியவை மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் முக்கியக் கூறுகளாக உள்ளது.
  • வருவாய்ச் செலவினங்களில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வு காலப் பலன்கள், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கானச் செலவுகள், நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டி, மானியங்கள் மற்றும் துணை மானியங்கள்,  ஊக்கத்தொகைகள், பங்களிப்புகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரப் பகிர்வு உட்பட ஆகியவை அனைத்தும் இதில் உள்ளடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்