2024 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேலைவாய்ப்பின்மை குறிகாட்டிகள்
April 15 , 2025 7 days 59 0
நகர்ப்புறங்களில், ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) என்பது நன்கு அதிகரித்துள்ளது (2023 ஆம் ஆண்டில் 74.3% ஆக இருந்த இது 2024 ஆம் ஆண்டில் 75.6% ஆக உயர்ந்தது) என்பதோடு பெண்கள் மத்தியில் இது சிறிது அதிகரித்துள்ளது (25.5% ஆக இருந்த இது 25.8% ஆக உயர்ந்தது).
இது LFPR விகிதத்தில் (50.3% முதல் 51.0% வரை) ஒட்டு மொத்த உயர்வுக்கு நன்கு வழி வகுக்கிறது.
பல்வேறு பிரிவுகளில் சிறிய அளவில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒட்டு மொத்த LFPR விகிதமானது 56.2% ஆக மாறாமல் இருந்தது.
ஒட்டுமொத்தத் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் (WPR) ஆனது, நகர்ப்புறங்களில் 47.0 சதவீதத்திலிருந்து 47.6% ஆக அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த WPR ஆனது ஒப்பீட்டளவில் மாறாமல் இருந்தது (53.4% சதவீதத்திலிருந்து 53.5% ஆக உயர்ந்தது).
கிராமப்புறங்களில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மையில் சற்று சரிவுடன் ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மையில் சிறிது சரிவு பதிவானது (4.3 சதவீதத்திலிருந்து 4.2% ஆக குறைந்தது).
நகர்ப்புற ஆண்களின் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து (6.0 சதவீதத்திலிருந்து 6.1% ஆக உயர்ந்தது), பெண்களின் வேலைவாய்ப்பின்மை குறைந்தாலும் (8.9 சதவீதத்தில் இருந்து 8.2% ஆக குறைந்தது) ஒட்டு மொத்த நகர்ப்புற விகிதம் 6.7% ஆக நிலையாக உள்ளது.
அகில இந்திய அளவில், வேலைவாய்ப்பின்மையில் 5.0 சதவீதத்திலிருந்து 4.9% ஆக ஒரு சிறிய வீழ்ச்சிப் பதிவாகியது.
அகில இந்திய அளவில், தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் (WPR) சுமார் 58.0 சதவீதத்திலிருந்து 57.7% ஆக ஒரு சிறிய சரிவானது பதிவாகியுள்ளது.