இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் உதவித் திட்ட அமைப்பின் சந்திப்பில் ஒலிம்பிக் மைதானமே இலக்கு என்ற திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கான 148 தடகள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த 148 தடகள வீரர்களில் 20 புதிய முகங்களும், ஏழு ஒலிம்பிக் பிரிவுகள் மற்றும் 6 மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் பிரிவுகளில் இதர வீரர்களும் உள்ளடங்குவர்.
இந்தத் திட்டமானது இந்தியாவின் முன்னணித் தடகள வீரர்களுக்கு உதவி வழங்கச் செய்வதற்கான ஒரு முயற்சி ஆகும்.