இந்தியாவில் சிறு நிதி நிறுவனங்கள் (MFI) என்ற தொழில்துறையானது கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 2,176 சதவீதத்திற்கும் அதிகமான அதிகபட்ச ஒரு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சுமார் 17,264 கோடி ரூபாயாக இருந்த இதன் செயல்பாடானது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி 3.93 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேசங்களை உள்ளடக்கிய சுமார் 111 முன்னேற்றத்தினை நாடும் மாவட்டங்கள் உட்பட சுமார் 723 மாவட்டங்களில் MFI நிறுவனங்கள் செயல்படுகின்றன.
அவை கிட்டத்தட்ட 8 கோடி கடன் வாங்குபவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதோடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) 2.03 சதவீதப் பங்களிப்பை வழங்குவதோடு மேலும், 1.3 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.