2024 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உச்ச கட்ட மின் தேவை
March 27 , 2024
242 days
294
- தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவையானது, மார்ச் 22 ஆம் தேதியன்று 19,409 மெகா வாட் என்ற புதிய உச்ச நிலையை எட்டியது.
- 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 தேதியன்று பதிவான 19,387 மெகாவாட் என்ற முந்தைய அதிக பட்ச அளவினை இது விஞ்சியுள்ளது.
- தென் மாநிலங்களுள், தமிழக மாநிலத்தில் அதிகபட்ச மின் தேவை உள்ளது.
- 2024 ஆம் ஆண்டு கோடை காலத்தில், மாநிலத்தின் உச்சகட்ட மின் தேவை 20,806 மெகா வாட்டை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) சொந்த அனல் மின் உற்பத்தி திறன் 4,320 மெகாவாட் ஆக உள்ளது.
- மாநிலத்தின் புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் சார்ந்த மின் உற்பத்தி மையங்களின் நிறுவப் பட்ட திறன் ஆனது 16,417.38 மெகாவாட்டாக உள்ளது.
Post Views:
294