தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கையானது சுமார் ஏழு லட்சம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கையானது, 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,200 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6.18 கோடியாக உள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதியன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.11 கோடியாக இருந்தது.
அன்றிலிருந்து பட்டியல் திருத்த காலத்தில், 13,61,888 புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டது, அதே நேரத்தில் புலம் பெயர்வு, இறப்பு மற்றும் போலி உள்ளீடுகள் காரணமாக 6,02,737 பெயர்கள் நீக்கப் பட்டன.
3,23,997 வாக்காளர்களின் உள்ளீடுகளில் திருத்தம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதி 6,60,419 என்ற எண்ணிக்கையுடன் அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி 1,72,419 என்ற எண்ணிக்கையுடன் குறைந்த வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி 4,62,612 என்ற எண்ணிக்கையுடன் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது தொகுதியாக உள்ளது.
சென்னை மாவட்டத்தில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி 1,72,624 என்ற அளவில் வாக்காளர்களைக் கொண்டுள்ளது.