TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழக வாக்காளர்கள்

January 25 , 2024 176 days 1507 0
  • தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கையானது சுமார் ஏழு லட்சம் என்ற அளவிற்கு  உயர்ந்துள்ளது.
  • தற்போது தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கையானது, 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் மற்றும் 8,200 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6.18 கோடியாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதியன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.11 கோடியாக இருந்தது.
  • அன்றிலிருந்து பட்டியல் திருத்த காலத்தில், 13,61,888 புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டது,  அதே நேரத்தில் புலம் பெயர்வு, இறப்பு மற்றும் போலி உள்ளீடுகள் காரணமாக 6,02,737 பெயர்கள் நீக்கப் பட்டன.
  • 3,23,997 வாக்காளர்களின் உள்ளீடுகளில் திருத்தம் செய்யப்பட்டது.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதி 6,60,419 என்ற எண்ணிக்கையுடன் அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
  • நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி 1,72,419 என்ற எண்ணிக்கையுடன் குறைந்த வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி 4,62,612 என்ற எண்ணிக்கையுடன் அதிக வாக்காளர்களைக் கொண்ட இரண்டாவது தொகுதியாக உள்ளது.
  • சென்னை மாவட்டத்தில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி 1,72,624 என்ற அளவில் வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்