TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இட ஒதுக்கீடு

April 7 , 2024 231 days 2174 0
  • கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 69% இடஒதுக்கீட்டிற்கு மாநில அரசின் மக்கள் தொகையில் 89% பேர் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
  • எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS) பிரிவின் கீழ் மற்றவர்களுக்கு கூடுதலாக 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு மாநில அரசினைக் கட்டாயப் படுத்த முடியாது.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கைக்கான 10% EWS ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டி மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரி இருந்தார்.
  • 1982 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகளைப் பின்பற்றி, மாநிலத்தில் உள்ள சாதிகள் மற்றும் சமூகங்களின் 100% இல்ல வாரியான கணக்கெடுப்பு 1983 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
  • அம்பாசங்கர் ஆணையம் (1983) ஆனது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் உட்பட மாநிலத்தின் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் விகிதம் ஆனது மொத்த மக்கள்தொகையில் 68% என்று வெளிப்படுத்தியது.
  • 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பத்தாண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினரின் மக்கள் தொகை முறையே 20% மற்றும் 1.1% ஆக உள்ளது.
  • சட்டநாதன் ஆணையம் எனப்படும் முதல் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆனது 1970 ஆம் ஆண்டில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்