2024 ஆம் ஆண்டில், குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கையானது சுமார் 8,42,412 என்ற அளவிற்கு மோசமாக குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஒரு ஐந்து ஆண்டுகளில், பிறப்புகளின் எண்ணிக்கை ஆனது ஒன்பது லட்சத்தை விட அதிகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் 9,02,306 பிறப்புகள் பதிவானதால், 2024 ஆம் ஆண்டின் குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை 6.6% குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பிறப்பு விகிதம் ஆனது 10.9 ஆக இருந்த நிலையில் இது முந்தைய ஆண்டு 11.7 ஆக இருந்தது.
தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) ஆனது 1.4 ஆக உள்ள நிலையில் இது 2.1 என்ற மாற்றீடு அளவை விடக் குறைவாகும்.
பிறப்பு விகிதங்களில் ஏற்படும் சரிவு ஆனது இனப்பெருக்க வயதில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவதற்கும், பிறரைச் சார்ந்திருக்கும் வயதினரின் மக்கள்தொகை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கும்.