2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி
July 14 , 2024 133 days 253 0
தனது மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியானது 50% சதவீதத்தினை தாண்டியுள்ளது என்ற வகையில் இது ஏப்ரல் மாதத்தில் மிகவும் அதிகபட்சமாக 52% ஆக இருந்தது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது காற்று, சூரிய ஒளி, நீர் மற்றும் இணை மின்னாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகா வாட் என்ற அதிக எரிசக்தி தேவை பதிவாகி உள்ளது, என்பதோடு மின் நுகர்வானது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 454 மில்லியன் அலகுகள் (MUs) பதிவாகியுள்ளது.
நம் மாநிலத்தின் மின்சார உற்பத்தி அலகுகள் ஆனது, மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 24,530 மில்லியன் அலகுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைக் கொண்டிருந்தன.
நம் மாநிலத்தின் மொத்த உற்பத்தி 48,835 மில்லியன் அலகுகள் ஆகும் என்ற நிலையில் இது சராசரியாக 50% தூய்மையான ஆற்றல் கலவையைக் குறிக்கிறது.
மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 34,700 மெகாவாட் ஆகும்.
நீர் மின்னாற்றல் (2,300 மெகாவாட்), காற்று ஆற்றல் (8,750 மெகாவாட்), சூரிய மின்னாற்றல் (6,550 மெகாவாட்) மற்றும் இணை மின்னாக்கம் (700 மெகாவாட்) உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் 18,300 மெகாவாட் ஆகும்.
ஏப்ரல் 30 ஆம் தேதியன்று சென்னையில் 4,380 மெகாவாட் ஆற்றல் தேவை என்பது பதிவானதையடுத்து, நம் மாநிலத்தில் ஆற்றல் தேவை 20,500 மெகாவாட்டைத் தாண்டி 20,700 மெகாவாட்டைத் தொட்டது.
அதே மாதத்தில், சுமார் 12,960 மில்லியன் அலகுகள் என்ற மொத்த உற்பத்தியில் அதிக பட்சமாக 6,900 மில்லியன் அலகுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பதிவு செய்யப் பட்டது.