TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தீவிர வானிலை நிகழ்வுகள்

November 12 , 2024 13 days 66 0
  • தமிழ்நாடு மாநிலத்தில் இதுவரை 67 தீவிர வானிலை நாட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை இம்மாநிலம் எதிர்கொண்டுள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 27 நாட்களை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.
  • இந்தக் கூர்மையான அதிகரிப்பு ஆனது பருவநிலை இந்தியா 2024 என்ற அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
  • இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் சுமார் 25 மனித உயிரிழப்புகள், 14 கால்நடை உயிரிழப்புகள் மற்றும் 149 வீடுகள் சேதம் போன்றவை பதிவாகியுள்ளன.
  • சீரற்ற மழைப்பொழிவு, கடுமையான வெப்ப அலைகள் மற்றும் புயல் உருவாக்கம் காரணமாக தமிழகத்தில் 1,039 ஹெக்டேர் பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 274 நாட்களுள் 255 நாட்களில் இந்தியா தீவிர வானிலையை எதிர்கொண்டுள்ளது.
  • இது முந்தைய இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட தீவிர வானிலைப் பதிவான நாட்களின் எண்ணிக்கையை மிஞ்சுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்