TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் நலத் திட்டங்களுக்கான வருடாந்திர வருமான வரம்பு

December 20 , 2024 26 days 99 0
  • தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையானது இங்கு குடும்பங்களின் வருடாந்திர வருமான உச்ச வரம்பினை 72,000 ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக அதிகாரப்பூர்வமாக உயர்த்தியுள்ளது.
  • பொருளாதார நிலையின் மாற்றத்தினால், தமிழகத்தில் தனிநபர் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
  • வருமான உச்ச வரம்பு திருத்தப்பட்டதால், நலத் திட்டங்களுக்கான பயனாளிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்படும்.
  • இத்துறையானது, 1993 ஆம் ஆண்டில் 12,000 ரூபாயாக இருந்த வருடாந்திர வருமான உச்ச வரம்பினை 2008 ஆம் ஆண்டில் 24,000 ரூபாயாக திருத்தியமைத்தது.
  • மேலும், 2012 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களுக்கு 24,000 ரூபாயாக இருந்த இந்த வரம்பு 40,000 ரூபாயாகவும், நகர்ப்புறங்களுக்கு 60,000 ரூபாயாகவும் திருத்தப்பட்டது.
  • இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் வருமான உச்ச வரம்பில் கடைசித் திருத்தம் செய்யப் பட்டு அது 72,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்