இத்தாலி அல்லது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் அளவை ஒத்த 30.87 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் அதிகமான வனப்பகுதியானது இங்கு காட்டுத் தீ மூலம் தீக்கிரையானது.
17.24 மில்லியன் ஹெக்டேர் அழிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டு காட்டுத் தீயில் எரிந்த சம்பவத்திற்குப் பிறகு 79 சதவீதம் அதிகரிப்பு பதிவானது, அதாவது 13.63 மில்லியன் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது, 18.08 மில்லியன் ஹெக்டேர் எரிந்து நாசமான 2019 ஆம் ஆண்டு காட்டுத்தீ பாதிப்பிற்குப் பிறகு பதிவான மிக அதிகப் பரப்பிலான பாதிப்பு ஆகும்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது, ஒரே மாதத்தில் சுமார் 10.63 மில்லியன் ஹெக்டேர் தீயில் அழிந்தன.
17.9 மில்லியன் ஹெக்டேர்கள் பாதிக்கப்பட்டதுடன் அமசோனியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து சுமார் 9.7 மில்லியன் ஹெக்டேர் பாதிப்புடன் செராடோவும், சுமார் 1.9 மில்லியன் ஹெக்டேர் பாதிப்புடன் பன்டனலும், 1 மில்லியன் ஹெக்டேர் பாதிப்புடன் மத்த மட்டா அட்லாண்டிகா பகுதியும் உள்ளன.