2024 ஆம் ஆண்டில் யானைகள் எண்ணிக்கை - அசாம்
January 6 , 2025
16 days
114
- 2024 ஆம் ஆண்டின் யானைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பின் போது அசாமில் 5,828 யானைகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளது.
- 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கடந்த கணக்கெடுப்பில் பதிவான சுமார் 5,719 என்ற எண்ணிக்கையினை விட இது அதிகமாகும்.
- மொத்த எண்ணிக்கையில் 82% யானைகள் அல்லது 4,777 யானைகள் அம்மாநிலத்தில் உள்ள ஐந்து யானைகள் வளங்காப்பகங்களில் உள்ளன.
- சிராங்-ரிபு யானைகள் வளங்காப்பகத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் (அடர்த்தி) பதிவாகியுள்ளது.
- இங்கு யானைகளின் எண்ணிக்கையானது 2011 ஆம் ஆண்டில் 5,620 ஆகவும், 2008 ஆம் ஆண்டில் 5,281 ஆகவும், 2002 ஆம் ஆண்டில் 5,246 ஆகவும் இருந்தது.
Post Views:
114