TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை – தமிழ்நாடு

April 24 , 2024 214 days 1131 0
  • தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • தமிழக மாநிலத்தில் முந்தையப் பொதுத் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்களை விட இது ஒப்பீட்டளவில் குறைவாகும்.
  • தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,23,33,925 வாக்காளர்களில் 4,34,58,875 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி வாக்கு செலுத்தினர்.
  • இதில் சதவீத அடிப்படையில், பெண் வாக்காளர்கள் (69.85%) எண்ணிக்கையானது ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையினை (69.58%) மிகவும் ஒரு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விஞ்சியுள்ளது.
  • தருமபுரியில் அதிகபட்சமாக 81.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • மத்திய சென்னையில் வாக்குப் பதிவானது 53.96 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
  • ஒன்பது இடங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
  • ‘இதர’ பிரிவில், கரூரில் அதிக சதவீத வாக்குகளும் (62.22), தருமபுரியில் (50.28) அதிக வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்