தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய போது, ஏறக்குறைய 4.67 லட்சம் வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை (நோட்டா) என்ற விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்துள்ளனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் மொத்தம் 26,450 வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்வு செய்தனர் என்ற நிலையில் திண்டுக்கல் (22,120) மற்றும் திருவள்ளூர் (SC) (18,978) வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
நோட்டா வாக்குகள் மிகவும் குறைவாக கன்னியாகுமரி (3,756), இராமநாதபுரம் (6,295) மற்றும் கடலூரில் (7,292) பதிவாகியுள்ளது.
நோட்டா 19 இடங்களில் 1 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
2014 ஆம் ஆண்டு தேர்தலில், நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் சுமார் 5.7 லட்சம் வாக்காளர்கள் நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்தனர்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 3.45 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்ந்தெடுத்தனர்.
2021 ஆம் ஆண்டில் 0.75 சதவீதமாகப் பதிவான நோட்டா, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 1.07% ஆக பதிவாகியுள்ளதால் நோட்டா பதிவில் சரிவுப் போக்கு பதிவாகியுள்ளது.