TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கூடுதல் நிதி

December 17 , 2023 217 days 157 0
  • தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்காக (EVM) கூடுதலாக 3,147.92 கோடி ரூபாய் செலவழிப்பதற்குப் பாராளுமன்றத்தின் ஒப்புதலை அரசாங்கம் கோரியுள்ளது.
  • இது தேர்தலுக்காக கணிக்கப்பட்ட மொத்தச் செலவின மதிப்பினை 5,000 கோடி ரூபாய்க்கு மேல் அதிகரிக்கிறது.
  • தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு நிதி அளிப்பதற்காக சட்ட அமைச்சகத்திற்கு 3,147.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நிர்வாகச் செலவுகளுக்காக தேர்தல் ஆணையத்துக்கு 73.67 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக வாங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சோதனை மற்றும் பராமரிப்புக்காக 36.20 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்குவதற்கு 575.07 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2014, 2009 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களுக்கான செலவினம் முறையே 3,870.34 கோடி ரூபாய், 1,114.38 கோடி ரூபாய் மற்றும் 1,016.08 கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்