ஜல் சக்தித் துறை அமைச்சகம் ஆனது 'ஜல் சக்தி அபியான்: மழைநீர் சேமிப்பு-2024' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் பிற நிலையான நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீர் வளங்காப்பு, மழைநீர்ச் சேகரிப்பு, நீர்நிலைகளுக்குப் புவிசார் குறியீடு வழங்குதல், ஜல் சக்தி கேந்திராக்களை (செயலகங்களை) நிறுவுதல், தீவிரமான காடு வளர்ப்புத் திட்டம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பிரச்சாரம் உள்ளது.