2024 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி (இறுதிப் பதிப்பு)
September 9 , 2024 74 days 152 0
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வில்வித்தை வீரர் என்ற வரலாற்றை ஹர்விந்தர் சிங் (அரியானா) படைத்துள்ளார்.
உலகச் சாம்பியனான குண்டெறி வீரரான சச்சின் சர்ஜேராவ் கிலாரி (மாகாராஷ்டிரா) மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.
சுமித் ஆன்டில் (அரியானா) தங்கம் வென்றதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஆண் மற்றும் இந்தியாவில் இரண்டாவது நபர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
மகளிருக்கான 400 மீட்டர் T20 இறுதிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி (தெலங்கானா) வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவிற்கான 16வது பதக்கத்தை வென்றார்.