TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டின் இலக்கைத் தவற உள்ள பங்கு முதலீட்டு விலக்கல்

December 29 , 2023 331 days 274 0
  • நடப்பு நிதியாண்டிற்கான முதலீட்டு விலக்கல் இலக்கு ஆனது மீண்டும் தவற வாய்ப்பு உள்ளது.
  • நடப்பு நிதியாண்டில், மதிப்பிடப்பட்ட தொகை 51,000 கோடி ரூபாயாகும்.
  • ஆனால், ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO) மற்றும் ஓஎஃப்எஸ் (விற்பனைக்குக் கொண்டு வரப்படும் பங்குகள்) மூலமான சிறுபான்மை பங்கு (முதன்மை பங்கு தாரரைச் சாராத பங்குகள்) விற்பனை மூலம் சுமார் 20% அல்லது 10,049 கோடி ரூபாய் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் IDBI வங்கியின் தனியார்மயமாக்கல் அடுத்த நிதியாண்டிற்கு மாற வாய்ப்புள்ளது.
  • மொத்தத்தில், தற்போது DIPAM (முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை) மூலம் சுமார் 11 பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்படுகின்றன.
  • கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டு விலக்கல் மூலம் திரட்டப்பட்ட சுமார் 4.20 லட்சம் கோடி ரூபாயில் 3.15 லட்சம் கோடி ரூபாய் ஆனது சிறுபான்மை பங்கு விற்பனையிலிருந்தும் 69,412 கோடி ரூபாய் ஆனது 10 மத்தியப் பொதுத் துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மூலோபயப் பரிவர்த்தனைகள் மூலமும் பெறப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்