2024 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் ஈவுகள்
May 23 , 2024 184 days 233 0
2023 ஆம் நிதியாண்டினை விட 2024 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து (PSBs) சுமார் 30 சதவீதம் கூடுதல் ஈவுகளை அரசாங்கம் பெறும்.
முந்தைய நிதியாண்டில் 13,804 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் ஈவுப் பங்கானது 2024 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 18,013 கோடியாக இருக்கும்.
இந்தக் கணக்கீடு ஆனது 15 சதவீதப் பங்குப் பங்கீட்டு வரியை கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதோடு அதுவும் அரசாங்கத்திற்கேச் செல்லும்.
12 பொதுத் துறை வங்கிகளில், 10 வங்கிகள் பங்குகளை அறிவித்துள்ளன.
2024 ஆம் நிதியாண்டில் அதிகப் பங்குகளை (முக மதிப்புடன் ஒப்பிடும் போது) செலுத்தும் முதல் நான்கு பொதுத் துறை வங்கிகள் - பாரத ஸ்டேட் வங்கி (SBI), பரோடா வங்கி (BoB), கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியனவாகும்.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது ஈவுப் பங்குகளை அறிவிக்கவில்லை.