2024 மக்களவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்கள்
January 1 , 2025 58 days 192 0
2024 ஆம் ஆண்டில் 1,19,374 பேர் வெளிநாடு வாழ் வாக்காளர்களாகப் பதிவு செய்தனர் என்ற நிலையில் கேரளாவில் அதிகபட்சமாக 89,839 பேர் பதிவு செய்தனர்.
2019 ஆம் ஆண்டில், 99,844 பேர் வெளிநாடு வாழ் வாக்காளர்களாகப் பதிவு செய்தனர்.
ஆனால் சுமார் 2,958 வெளிநாடு வாழ் வாக்காளர்கள் மட்டுமே இந்தத் தேர்தலில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வந்தனர்.
இவர்களில் 2,670 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பல பெரிய மாநிலங்களில் வெளிநாடு வாழ் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கை சுழியாக பதிவானது.
குஜராத்தில் பதிவான 885 வெளிநாடு வாழ் வாக்காளர்களில் இருவர் மட்டுமே வாக்கு அளித்தனர்.
மகாராஷ்டிராவில் பதிவான 5,097 NRI வாக்காளர்களில் 17 பேர் மட்டுமே வாக்கு அளித்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 7,927 NRI வாக்காளர்கள் மட்டுமே வாக்கு அளித்தனர்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தகுதியான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு என்று பதிலாள் முறை வாக்குரிமையை அனுமதிக்கும் மசோதாவை 16வது மக்களவை நிறைவேற்றியது.
இருப்பினும் இந்த மசோதாவினை தற்போது வரையில் மாநிலங்களவையில் அறிமுகப் படுத்த இயலவில்லை.
2020 ஆம் ஆண்டில், இது வரை அரசுப்பணியில் இருக்கும் வாக்காளர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெறும் மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச் சீட்டு முறை (ETPBS) வசதியை, தகுதியான வெளிநாடு வாழ் இந்திய வாக்காளர்களுக்கும் சேர்த்து நீட்டிப்பதற்கு தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் முன்மொழிந்தது.