TNPSC Thervupettagam

2024/25 ஆம் ஆண்டின் முதல் துணை மதிப்பீடுகள்

December 15 , 2024 7 days 69 0
  • தமிழக அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான 3,531 கோடி ரூபாய்க்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
  • தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் லிமிடெட் நிறுவனத்திற்கு கூடுதல் இழப்பு நிதி மானியமாக 1,634.86 கோடி ரூபாயை வழங்க அரசு அனுமதித்துள்ளது.
  • மத்திய அரசினால் உருவாக்கப்பட்ட மின்துறையின் செயல்திறனுடன் இணைக்கப் பட்ட 0.50% GSDP கூடுதல் கடன் பெறும் பிரிவின் சில வழிகாட்டுதல்களின்படி இது மேற் கொள்ளப் படுகிறது.
  • 1954 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதிச் சட்டம் திருத்தப்பட்டு, எதிர்பாரா செலவு நிதியானது 150 கோடி ரூபாயிலிருந்து 500 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக வேண்டி தமிழ்நாடுக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு 70 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்