TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவான மின் தேவை

October 18 , 2024 36 days 105 0
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது 6.2% அதிகரித்து 68,967 மில்லியன் அலகுகளாக (MU) உள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த மின் தேவையானது 64,958 MU ஆக இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில், மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவையானது 20,784 மெகாவாட்டாக இருந்தது என்ற நிலையில் இது கடந்த ஆண்டில் இதன் ஒப்பிடக் கூடிய காலகட்டத்தில் 19,045 மெகாவாட்டாக இருந்தது.
  • இந்தியாவில் உள்ள மொத்தத் தொழிற்சாலைகளில், 15.66 சதவீதப் பங்குடன் (2,53,334) தமிழகம் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில், மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற எப்போதும் இல்லாத அளவினை எட்டிய மாநிலத்தின் மின் தேவையானது ஒரு புதிய சாதனை அளவினை எட்டியது.
  • ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தினசரி நுகர்வு அளவானது 454.32 MU என்ற புதிய உச்சத்தை எட்டியது.
  • 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் மொத்த நிறுவப் பட்ட மின் உற்பத்தி திறன் 41,126.68 மெகாவாட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்