TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டின் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை

October 23 , 2023 272 days 165 0
  • மத்திய அரசானது, 2024-25 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கு கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை (MSP) குவிண்டாலுக்கு ₹150 உயர்த்தி ₹2,275 ஆக அறிவித்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அதிகபட்சமாக உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையாகும்.
  • தற்போது, ​​2023-24 ஆம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்திற்கான (ஏப்ரல்-மார்ச்) கோதுமையின் MSP ஆனது ஒரு குவிண்டாலுக்கு ₹2,125 ஆக உள்ளது.
  • பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவின் (CCEA) கூட்டத்தில் இது தொடர்பான முடிவானது எடுக்கப் பட்டது.
  • முக்கிய ராபி (குளிர்கால) பருவப் பயிரான கோதுமையானது அக்டோபரில் பயிரிடத் தொடங்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
  • MSP என்பது விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் உறுதி செய்யப் படும் குறைந்த பட்ச ஆதரவு விலை விகிதமாகும்.
  • மேலும் இந்த விகிதத்திற்குக் குறைவாக தானியங்களானது அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கொள்முதல் முகமைகளால் வாங்கப் படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்