TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டிற்கான எத்தனால் கொள்முதல் விலையில் திருத்தம்

February 2 , 2025 25 days 136 0
  • எத்தனால் விநியோக ஆண்டிற்கான (ESY- 2024-25) பொதுத்துறை எண்ணெய் சந்தைப் படுத்துதல் நிறுவனங்களுக்கான (OMCs) எத்தனால் கொள்முதல் விலைகளை திருத்தி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய அரசின் எத்தனால் கலப்பு கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தின் கீழ், இந்தக் காலம் ஆனது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 01 முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • C ரக கனசர்க்கரைக் கழிவுகளிலிருந்து (CHM) பெறப்பட்ட எத்தனாலின் தொழிற்சாலை கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு சுமார் 56.58 ரூபாயிலிருந்து 57.97 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இது 3% உயர்வைக் குறிக்கிறது.
  • பொதுத்துறை OMC நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் எத்தனால் கலப்பு ஆனது 2013-14 ஆம் எத்தனால் விநியோக ஆண்டில் சுமார் 38 கோடி லிட்டரிலிருந்து 2023-24 ஆம் எத்தனால் விநியோக ஆண்டில் 707 கோடி லிட்டராக உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்