2024-25 ஆம் ஆண்டில் தமிழகப் பொருளாதாரம் 8.08% முதல் 10.69% வரை வளர்ச்சி அடையக் கூடும்.
சமீபத்தில் நிறைவடைந்த 2023-24 ஆம் நிதியாண்டில், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் ஆனது 8.08% முதல் 9.44% வரையிலான வரம்புகளில் மாறுபட்டதாக சென்னை பொருளாதாரக் கல்லூரி மதிப்பிட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆனது 7.3% ஆகும்.
2005-06 முதல் 2011-12 ஆம் ஆண்டு வரையிலான (2004-05 தொடர்) காலக் கட்டத்தில் மாநிலத்தில் 10.3% என்ற "வலுவான உண்மைநிலை வளர்ச்சி பதிவானது", அதே சமயம் அகில இந்திய அளவிலான வளர்ச்சி 8.23% ஆகவே இருந்தது.
இருப்பினும், அதன் சராசரி வளர்ச்சி விகிதம் ஆனது 2012-13 முதல் 2022-23 ஆம் ஆண்டு வரையிலான (2011-12 தொடர்) காலக் கட்டத்தில் 6.21% ஆகக் குறைந்துள்ளது என்ற நிலையில் இது அகில இந்திய அளவில் 5.73% ஆக இருந்தது.