2024-25 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் தமிழ்நாடு அரசின் கடன்கள்
January 3 , 2025 4 days 94 0
2024-2025 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 45,000 கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு வரை, மாநில மேம்பாட்டுக் கடன் பத்திர வெளியீடு (SDL) மூலம் தமிழ்நாடு அரசு 50,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிலிருந்து பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) கடன் பெறுவதற்கான உச் சவரம்பு 3% ஆகும்.
2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மின்துறைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் GSDPயில் 0.5 சதவீதம் கூடுதல் கடன் வாங்கப் பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் SDL வெளியீடு மூலம் பெறப்பட்ட கடனில் 5,96,619.2 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது.
இது 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் 6,87,034.3 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் தமிழகத்தின் மொத்த நிலுவைத் தொகை 8,47,022.7 கோடி ரூபாயாக இருந்தது.
இது 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் 9,55,690.5 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.